ஓரெழுத்து ஒரு மொழி
ஓரெழுத்து ஒரு மொழி
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி உள்ளது. "ஓரெழுத்து ஒரு மொழி" என்றால், ஒரு எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தருவதாகும். தமிழில், 42 ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உள்ளன. உதாரணமாக, "ஆ" என்றால் பசு என்றும், "ஈ" என்றால் கொடு என்றும் பொருள்.
விளக்கம்:
ஓரெழுத்து ஒரு மொழி என்பது, ஒரு எழுத்து தனித்து நின்று ஒரு முழுமையான பொருளைக் குறிக்கும் தமிழ் இலக்கண வகையைக் குறிக்கிறது. நன்னூலின் படி, தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உள்ளன.
- ஓரெழுத்து ஒரு மொழி பொருள்
- ஆ - பசு
- ஈ- கொடு
- ஊ- இறைச்சி
- ஏ -அம்பு
- ஐ- தலைவன்
- ஓ- மதகுநீர் தாங்கும் பலகை
- கா- சோலை
- கூ- பூமி
- கை -ஒழுக்கம்
- கோ- அரசன்
- சா -இறந்து போ
- சீ -இகழ்ச்சி
- சே- உயர்வு
- சோ -மதில்
- தா -கொடு
- தீ- நெருப்பு
- தூ- தூய்மை
- தே- கடவுள்
- தை -தைத்தல
- நா -நாவு
- நீ -முன்னிலை ஒருமை
- நே- அன்பு
- நை -இழிவு
- நோ -வறுமை
- பா -பாடல்
- பூ -மலர்
- பே- மேகம்
- பை- இளமை
- போ செல்
- மா -மாமரம்
- மீ- வான்
- மூ -மூப்பு
- மே -அன்பு
- மை- அஞ்சனம்
- மோ -முகத்தல்
- யா- அகலம்
- வா -அழைத்தல்
- வீ- மலர்
- வை - புல்
- வெள- கவர்
- நொ -நோய்
- து - உண்